Wednesday, May 30, 2007

எரிபொருள் சிக்கனம் தேவை இக்கணம் !



உலகத்துல தட்டுப்பாடு அதிகமாகிட்டே வர பொருள்களில முக்கியமானது தண்ணிரும், எரிபொருளும். எரிபொருளால வளமான நாடுகளும் இருக்கு எதிரிகள் வசமான நாடுகளும் இருக்கு. இன்னைக்கு அமெரிக்கா வளைகுடா நாடுகள்ல ஜனநாயகம்(?) தழைக்கனும்னு விரும்பறதுக்கு முக்கிய காரணமே அங்கே இருக்கற எரிபொருள் வளம் தான்.

அமெரிக்கால ஒரு வருஷத்துக்கு 65 பில்லியன் கேலன் (1 கேலன் = 3.785 லிட்டர்) எரிபொருள் தேவைப்படுது.இது இங்க ஓடுற வாகனங்களுக்கு மட்டும். மொத்தமா ஒருநாளைக்கு 20 மில்லியன் பேரல்கள் எரிபொருள் தேவைப்படுது. ஒரு வருஷத்துல மொத்தமா அமெரிக்கர்கள் கார் ஓட்டுற தூரம் 2.5 ட்ரில்லியன் மைல்கள். இது சூரியனுக்கு 14,000 முறை போய்வர தூரம்!

கடந்த 50 வருடங்கள்ல பெட்ரோல் விலை இருமடங்கு ஆகியிருக்கு.இதுல கவனிக்கவேண்டிய விஷயம் 1950ல் இருந்த எரிபொருள் விலையை விட 2002ல இருந்த விலை குறைவு!

1950 $1.91
1955 $1.85
1960 $1.79
1965 $1.68
1970 $1.59
1975 $1.80
1980 $2.59
1985 $1.90
1990 $1.51
1995 $1.28
2001 $1.66
2002 $1.31
2003 $1.52
2004 $1.79
2005 $2.28
2006 $3.03


நம்மூரில ரெண்டு மூணு மாசத்துக்கு ஒருதடவை பெட்ரோல் விலை ஏறினாலே கொடி புடிக்க ஆரம்பிச்சடறாங்க. இங்கே தினமும் விலை ஏறிகிட்டே இருக்கு. காருக்கு கேஸ் போடவே தனியா சம்பாதிக்கனும் போல. இன்னைக்கு நிலவரப்படி சான் ஓசேல கேஸ் விலை ஒரு கேலனுக்கு 3.59 டாலர். இந்திய ரூபாய்க்கு மாத்தினா ஒரு லிட்டர் கிட்டத்தட்ட 41 ரூபாய்.

அதனால பெட்ரோல் மற்றும் பேட்டரில ஓடுற ஹைப்ரிட் கார்கள் நெறைய விற்பனை ஆகுது. இதனால் பெட்ரோல் செலவுல நிறைய மிச்சம் பிடிக்க முடியும். ஆனா இந்த மாதிரி கார்கள் சாதாரன கார்களை விட விலை அதிகம். அதனால பெட்ரோல்ல மிச்சம் பிடிக்கற பணம் காரோட விலைக்கு போயிடுது. இந்த மாதிரி அதிக செலவில்லாம எரிபொருள் மிச்சம் பண்ணனும்னு நினைக்கறிங்களா. அதுக்கும் ஒரு வழியிருக்கு. உங்க காரை கீழே இருக்கற படத்துல இருக்க மாதிரி ஓட்டினிங்கன்னா எரிபொருளே தேவைப்படாது !















Photo Sharing and Video Hosting at Photobucket



ஒரு வாரமா பதிவு போடாததுக்கெல்லாம் சேர்த்து வச்சு ஒரு மொக்கை பதிவு போட்டாச்சு. நாளைக்கு இன்னொரு மொக்கை பதிவுல சந்திக்கலாம் :)

4 Comments:

said...

நானும் எவ்வளவு நல்ல விஷயம் சொல்றாரு மணின்னு ரொம்ப ஆவலா படிச்சுகிட்டே வந்த, கடைசிலே வச்சீங்களே ஒரு டுவிஸ்டு.. அடேங்கப்பா!

ஒரு வாரம் பதிவு போடாத குறையை தீர்த்திடுச்சுங்க மணி

said...

மணி இதை எல்லாம் மொக்கை பதிவுல சேக்க முடியாது. அதுக்கு தனி இலக்கணம் இருக்கு :))..

உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியுமா? அமெரிக்காவுல நம்ம எல்லாம் 40-50 மைல் வேகத்துல கார் ஓட்டினா அதுலயே தினமும் 2 பில்லியன் கேலன் பெட்ரோலை மிச்சம் புடிக்க முடியுமாம்..

said...

நன்றி கார்த்தி,சந்தோஷ்.

said...

//உங்ககிட்ட கேக்காம கொள்ளாம உங்களையும் எட்டு போட கூப்புட்டுடேன்.. கொஞ்சம் கோச்சிகாம ஒரு எட்டு
எட்டிட்டு போயிடுங்க. இங்க என்னோட ஏரியாவுல கூப்பிட்டு இருக்கேன் உங்களை.

//

அழைப்புக்கு நன்றி சந்தோஷ். கண்டிப்பா எழுதறேன்.