Thursday, June 28, 2007

சமீபத்திய எட்டு



"ஏண்டா நாய்க்கு பேரு வச்சியே சோறு வச்சியா"னு விவேக் ஒரு படத்துல கேட்கற மாதிரி மறுபக்கம்னு பேரெல்லாம் வச்சு ப்ளாக் ஆரம்பிச்சாச்சு(ஓசில கிடைக்கறது தான), எழுதறதுக்கு தான் ஒரு பக்கத்தையும் காணும். ஏதாவது சரக்கு இருந்தா தான பதிவுல வரும். ஒவ்வொரு நாளும் இன்னைக்கு என்ன எழுதலாம்னு யோசிச்சு யோசிச்சு முடிவு பண்றதுக்குள்ள நாளே முடிஞ்சுடுது. இப்படி தெளிந்த நீரோடை மாதிரி போய்கிட்டிருந்த என் பதிவுலகத்துல நீங்களும் எட்டு போடுங்கன்னு ஒரு கல்லெறிஞ்சுட்டு போயிட்டாரு சந்தோஷ். முன்னால தமிழ்மணத்தை கலக்கின அழகு ஆட்டத்துக்கு தென்றல் அழைச்சிருந்தாரு. அதையே இன்னமும் எழுதாம கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கி போய் இருக்கேன். தென்றல் என்னை பெருந்தன்ன்மையோட மன்னிப்பாருன்னு நினைக்கிறேன். இப்ப இந்த அழைப்பு வேற. எவ்வளவு கடனைத் தான் சேர்த்து வைக்கிறதுன்னு முடிவு பண்ணி ஆபிசுக்கு அரை நாள் லீவு போட்டு எழுத உக்கார்ந்துட்டேன் :) . அந்த அரை நாள் சம்பளத்தை சந்தோஷ் wire transfer பண்றேன்னு சொல்லிட்டாரு. ஏண்டா இந்த மொக்கை பதிவு எழுதறதுக்கு அரை நாள் லீவான்னெல்லாம் கேக்கப்படாது ஆமா.

நம்மளை பத்தி பெருமையா நினைக்கிற எட்டு விஷயங்களை எழுதனுமாம். தமிழ்மணத்துல எல்லாரும் எழுதி முடிச்சிட்டாங்க. இப்போ அந்த ஜோதில நானும் ஐக்கியமாயிடறேன்.
பொதுவா எனக்கு என்னை பத்தி நானே பெருமையா பேசிக்கறது பிடிக்காது( அப்படி பேச எதாவது இருந்தா தானடா எருமைன்னு நீங்க திட்டறது கேக்கலை ). அதனால சமீபத்தில நான் முழித்த, ரசிச்ச, சிரிச்ச, அதிர்ந்த , வியந்த, அழுத , யோசித்த (ஆமாங்க எப்பவாவது தான் யோசிப்பேன், கல்யாணமயிடுச்சுல்ல! ) எட்டு விஷயத்தை எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன். போட்டி விதிய மீறினா ஃபைன் எல்லாம் இல்லைல்ல.

சமீபத்தில் முழித்தது
குழந்தைங்க கிட்ட பேசும்பொழுது எப்பவுமே கொஞ்சம் உஷாரா பேசனும். இல்லைன்னா அவங்க கேக்கற எதிர்கேள்விக்கு பதில் தெரியாம 'பே'னு முழிக்க வேண்டியிருக்கும். ரெண்டு நாளைக்கு முன்னாடி வீட்ல என் பசங்களோட (பொண்ணு 5 வயசு, பையன் 1 வயசு) விளையாடிகிட்டு இருந்தேன். அப்போ என் பொண்ணோட கையில் இருந்த பொம்மைய என் பையன் பிடுங்கிட்டான். உடனே என் பொண்ணுக்கு கோபம் வந்து அவனை முதுகுல ஒரு அடி அடிச்சா. நான் உடனே நாட்டாமை மாதிரி "ஏம்மா தம்பிய அடிச்ச, அவன் உனக்கு தம்பி தான, நீ அவன் கூட சமத்தா விளையாடனும். அவன் உனக்கு God குடுத்த கிஃப்ட்"னு ஒரு லெக்சர் அடிச்சேன். அதுக்கு அவ "போங்கப்பா சும்மா பொய் சொல்லாதீங்க. அவன் ஒன்னும் God குடுத்த கிஃப்ட் இல்ல. கிஃப்ட்னா கலர் பேப்பர் எல்லாம் சுத்தி தான் தருவாங்க. அவன் என்ன கலர் பேப்பர் சுத்தியா பொறந்தான்" அப்படின்னா. அதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம நான் 'பே'னு முழிக்க வேண்டியதாயிடுச்சு.

சமீபத்தில் ரசித்தது
'மொழி' திரைப்படம். தமிழ்மனத்துல படத்தை பத்தி நிறைய படிச்சேன்னாலும் கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் பார்க்க முடிஞ்சுது. இதுபோல ஆரம்பத்தில இருந்து கடைசி வரைக்கும் தொய்வில்லாத, குடும்பத்தோட ரசிக்கற படம் வந்து ரொம்ப வருஷம் ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன். பிரகாஷ்ராஜுக்கு வாழ்த்துக்கள். 16$ டாலர் குடுத்து சிவாஜியும் பார்த்தேன். லாஜிக் எல்லாம் பார்க்காம (தமிழ் படத்துக்கு எதுக்கு அதெல்லாம்) படத்தை முழுக்க முழுக்க ரஜினிக்காக பார்க்கலாம். Just a fantasy movie not a fantastic movie. அந்த வகையில ரஜினிக்கு வெற்றி. பழைய படங்கள்ல அரைச்ச மாவையே திரும்பத் திரும்ப அரைக்கும் ஷங்கருக்கு தோல்வி தான்.

சமீபத்தில் அதிர்ந்தது
சிவாஜி படம் பார்க்கறப்போ நடந்த விஷயம். "பேரக் கேட்டோன ச்ச்ச்சும்மா அதிருதுல்ல.."னு ரஜினி முதல் தடவை சொன்ன உடனே என் உடம்பெல்லாம் அதிருது. என்னடா இது நமக்கே இப்படி அதிருதுன்னு புல்லரிச்சுப் போய் பார்த்தா பின்னாடி சீட்ல உட்கார்ந்திருந்த சின்னப் பையன் என் சீட்டை உதைச்சிகிட்டு இருக்கான். எப்படியோ அதிர்ந்தா சரி :)

சமீபத்தில் வியந்தது
இதுவும் சிவாஜி மேட்டர் தாங்க. தண்டவாளத்துல ரஜினியோட கால் மாட்டிக்கும். அப்போ நம்ம தங்கத்தலைவி ஷ்ரேயா ஓடிவந்து தன்னோட செவப்பு தாவணிய கழட்டி ட்ரெயினை நிப்பாட்டுவாங்க (தமிழ்ல இந்த மாதிரி சீன் வர எத்தனையாவது படம்னு கரெக்டா சொல்றவங்களுக்கு 100$ பரிசு). ட்ரெயின் நின்ன உடனே குனிஞ்சு அழுவாங்க பாருங்க (ஏன் ட்ரெயின் நின்னுச்சுனு அழுதாங்களோ?). அப்ப தான் ஷ்ரேயாவுக்குள்ள இவ்வளவு திறமையான்னு நினைச்சு வியந்தேன். ஷங்கரால மட்டும் தான் உள்ள மறைஞ்சிருக்கற அவ்வளவு திறமையையும் வெளில கொண்டுவர முடியும். 'மழை' படத்துல கூட ஷ்ரேயா கிட்ட இவ்வளவு திறமை இருந்த மாதி தெரியலை. அதுக்குள்ள எப்படி இவ்வளவு தெறமைய வளர்த்துகிட்டாங்கன்னு நெனைச்சு நெஜமாவே வியந்தேன் :).

சமீபத்தில் சிரித்தது
எல்லாரும் தினமும் பலதடவையாவது சிரிப்போம். ஆனா சில சமயம் தான் மனசு விட்டு சிரிப்போம். அந்த மாதிரி நான் சிரிச்ச விஷயம் ஒன்னு.சில சமயம் பதிவுகளை விட அதுல வர பின்னூட்டம் ரொம்ப நகைச்சுவையா இருக்கும். ஒரு புது நடிகைய பத்தி யாரோ போட்டிருந்த பதிவில ஒருத்தர் "தயவு செஞ்சு இந்த பொண்ணை சிம்பு கண்ணுல காட்டிடாதீங்கப்பா"னு பின்னூட்டம் போட்டிருந்தார். அதை படிச்சு நிஜமாவே மனம்விட்டு சிரிச்சேன். அதேமாதிரி உலகக்கோப்பை போட்டிகள் நடந்தப்ப சற்றுமுன்ல போட்டிகள் பத்தி விவாதிக்கற பதிவுகள்ல பின்னூட்டம் எல்லாம் கலக்கலா இருக்கும். சிறில் அதெயெல்லாம் தொகுத்து ஒரு பதிவாவே போட்டிருந்தாரு. சமீபத்தில ரசிச்சு சிரிச்ச பின்னூட்டம் சிவாஜி விமர்சனப் பதிவுல "ரஜினியோட கால் தண்டவாளத்துல மாட்டிக்கற அன்னைக்கு ஷ்ரேயா மட்டும் பச்சை தாவணி கட்டியிருந்தா என்ன ஆயிருக்கும்"னு ஒருத்தர் பின்னூட்டம் போட்டிருந்தார். அதை படிச்சு கற்பனை பண்ணி பார்த்தாலே சிரிப்பு வந்துடும்.

சமீபத்தில் அழுதது
நானேல்லாம் அழாத நாளே கிடையாதுங்க. உங்க வாழ்க்கையில அவ்வளவு சோகமான்னோ, அவ்வளவு இளகிய மனசான்னோ வீனா கற்பனை பண்ணதீங்க. வெங்காயம் உரிச்சா அழாத மனுசன் யாராவது இருக்கானா சொல்லுங்க. அதுவும் இந்த ஊரு வெங்கயங்க இருக்குதே. பூசனிக்காய் சைசில. ஒன்னு உரிச்சா ஒரு மணிநேரத்துக்கு கண்ணீர் க்யாரண்டி. வெங்காயம் உரிக்கறது, வெங்காயம்,தக்காளி வதக்கறது, காய்கறி வெட்டறது, மசாலா பொருளெல்லாம் சேக்கறது, கொதிக்கவிடறது மாதிரி சின்ன சின்ன வேலை தான் என்னுது. சமையல் எல்லாம் மனைவி தான் செய்வாங்க.

சமீபத்தில் யோசித்தது
ரெண்டு நாளைக்கு முன்னால 'குப்பி' படம் பார்த்தேன். ரொம்ப நல்லா எடுத்திருக்காங்க. இந்த படத்தை பத்தி தமிழ்மணத்துல நெறைய பதிவு வந்த மாதிரி தெரியலை. நெஜமாவே பாரட்ட வேண்டிய படம். படத்தை பார்த்ததுல நடந்ததை நடந்த மாதிரியே எடுத்திருக்க மாதிரிதான் தோனுது. சினிமாவுக்காக எதையும் கூட்டவோ குறைக்கவோ இல்லைன்னு நினைக்கிறேன். இது பத்தி நெறைய விவரம் தெரிஞ்சவங்க தெளிவு படுத்தினா நல்லாயிருக்கும். அதுல ஒரு காட்சில சிவராசனுக்கும் சுபாவுக்கும் வீடு பார்த்துக் குடுக்கற ரங்கநாத் சிவராசன் கிட்ட ஒரு கேள்வி கேட்பாரு "எங்க நாட்டுக்கு வந்து எங்க பிரதமரையே ( ராஜீவ் காந்தி இறந்தப்போ அவர் பிரதமர் இல்லைன்னு நினனக்கிறேன். ) கொன்னது தப்பில்லையா? "னு. அதுக்கு சிவராசன் " ஆமா தப்பு தான். அதனால இங்க எங்களுக்கு இருந்த மரியாதையும் சிம்பதியும் குறைஞ்சிடுச்சு"ம்பாரு. அது உண்மை தான. அதுக்கப்புறம் தான், தமிழ்நாட்டுலயும், இந்தியாவிலயும் புலிகள் மேல் இருந்த கண்ணோட்டம் மாறுச்சு. அதுவரைக்கும் அவங்களுக்கு வெளிப்படையா ஆதரவு தந்துட்டு இருந்தவங்க கூட மாற்றுநிலை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாச்சு. எனக்கு இலங்கை தமிழர் பிரச்சனையோ, புலிகள் பத்தியோ நெறைய தெரியாது. அது சம்பந்தமா பத்திரிக்கைகள்ல வர செய்திகள் படிச்சு தெரிஞ்சுகிட்டது தான். முன்ன ஒருதடவை அவர் இலங்கைக்கு போனப்ப கூட ராணுவ மரியாதை அணிவகுப்புல ஒரு ராணுவ வீரர் அவரை துப்பாக்கிய திருப்பி அடிக்க முயற்சி பண்ணது ஞாபகத்துல இருக்கு. எதற்காக புலிகள் ராஜிவ் காந்தியை கொலை பண்ணனும்?. அதனால அவங்களுக்கு பின்னடைவு தான் ஏற்பட்டுச்சு. யாராவது விஷயம் தெரிஞ்சவங்க பதில் சொல்லி தெளிவு படுத்தினா நல்லாயிருக்கும்.

ஷ்..ப்பா.. அப்படி இப்படி சமாளிச்சு ஏழு விஷயம் எழுதறதுக்குள்ள கண்ணை கட்டுதே. இன்னும் ஒன்னு எழுதனுமா? சரி எல்லாரும் எட்டு, எட்டுனு பதிவு போட்டுத் தாக்கற இந்த நம்பர் எட்டு பத்தி எட்டு தகவல்கள்(வழக்கம் போல காப்பி பேஸ்ட் தான் )
1. 1 human being out of 8 is a Chinese farmer.
2 October was the eighth month in the Roman calendar; currently August is the eighth month.
3. 8 babies delivered in one birth are called octuplets. The first set of eight surviving babies, the Louis-Chukwu Octuplets, were born in 1998.
4. Scorpio is the 8th astrological sign of the Zodiac.
5. On most phones, the 8 key is associated with the letters T, U, and V, but on the BlackBerry it is the key for B and N.
6. The symbol 8 means eternity or infinity as it has no start and no end.
7. '88' is the abbreviated terminology used for the Nazi salute, "Heil Hitler"—"H" being the eighth letter of the alphabet, repeated twice
8. 8 is a lucky number in Chinese culture because it sounds like the word "prosper". When Chinese businessmen stay in a hotel, they would rather choose rooms with numbers such as: 8, 38, 78, 88, 108 and so on.

சரி இப்போ நாம யாரையாவது கூப்பிடனுமாமே. நான் அழைக்க விரும்புவது (இவங்கள்ல எவ்வளவு பேர் ஏற்கனவே எழுதியிருக்காங்கன்னு தெரியலை. எழுதாதவங்க எழுதுனா சந்தோஷம்.)

1. ஒரு கோடு போடறதா இருந்தாலும், தன்னோட கதை, கவிதை, அனுபவங்கள்னு கலந்து கட்டி ரோடா போடற கனவுலகம் கார்த்தி.
2. ஒரு 8 குடுத்தாலும் அதை எந்த மியூச்சுவல் ஃபண்ட்ல போட்டு 8888 ஆக்கலாம்னு யோசனை சொல்ற நாணயமான தென்றல்.
3. இட ஒதுக்கீடுல இருந்து சிவாஜில ஷ்ரேயாவோட இடை ஒதுக்கீடு வரைக்கும் எல்லாத்தையும் எழுதற நண்பர் சிவபாலன்
4. அப்பப்ப தன்னைதானே கிள்ளி பார்த்து தான் ஒரிஜினல் தானா இல்லை போலியானு டெஸ்ட் பண்ணிக்கற உண்மைத்தமிழன்.
5. காதல் இளவரசன் பெங்களூரு புகழ்(புயல்) இராயல் ராம்
6. எல்லா பதிவுக்கும் வந்து தன்னோட ரெண்டு அனா (2 Cents) குடுத்துட்டு போற பாஸ்டன் பாலா
7. முதல்ல க்ரிக்கெட் பத்தி எழுத ஆரம்பிச்சு, அப்புறம் ஜென் கதைகளுக்கு போய், இப்போ என்னை மாதிரியே காணாமல் போன சகோதரி அவந்திகா
8. திராவிடர் திலகம், பகுத்தறிவு பாசறை, தமிழ்மணத்தின் கலைஞர் லக்கிலுக். (இவருக்கு என்னை தெரியாதுனு நினைக்கிறேன். ஆனா இவரோட எல்லா பதிவும் நான் படிச்சிருக்கேன். அந்த உரிமைல கூப்பிடறேன் :) )

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

18 Comments:

said...

/5. காதல் இளவரசன் பெங்களூரு புகழ்(புயல்) இராயல் ராம்//

மணி,

ஏனிந்த கொலைவெறி??? காதலாம்! இளவரசனாம்....

:((((

said...

மணியண்ணே வித்தியாசமான எட்டு.

said...

//அதுக்கு அவ "போங்கப்பா சும்மா பொய் சொல்லாதீங்க. அவன் ஒன்னும் God குடுத்த கிஃப்ட் இல்ல. கிஃப்ட்னா கலர் பேப்பர் எல்லாம் சுத்தி தான் தருவாங்க. அவன் என்ன கலர் பேப்பர் சுத்தியா பொறந்தான்" அப்படின்னா. அதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம நான் 'பே'னு முழிக்க வேண்டியதாயிடுச்சு.//

ஹி ஹி.... சூப்பர் மணி.....

ஜீனியர் மணி'ஸ் எல்லாம் பயங்கர ஜீனியசஸ்'ஆ தான் இருக்காங்க... ஹிம் அவங்க அம்மா மாதிரி போலே... ;-)

said...

டன் :)

Eight Random Facts Meme « Snap Judgment

said...

//ஏனிந்த கொலைவெறி??? காதலாம்! இளவரசனாம்.... //

ஏதோ என்னால முடிஞ்சது :)

said...

//மணியண்ணே வித்தியாசமான எட்டு.//

நன்றி சந்தோஷ்..

said...

//ஜீனியர் மணி'ஸ் எல்லாம் பயங்கர ஜீனியசஸ்'ஆ தான் இருக்காங்க... ஹிம் அவங்க அம்மா மாதிரி போலே... ;-)
//

எப்படிங்க இராம் இப்படி கரெக்டா தப்பா சொல்றிங்க :)

said...

//டன் :)
//

நன்றி பாபா. நீங்க ஏர்கனவே போட்டது எனக்கு தெரியாது.

said...

ஆஹா.. நம்ம பேரும் இருக்கு.. கொஞ்சம் டைம் கொடுங்க மணி.. எழுதிடுறேன்

said...

/சமீபத்தில் அதிர்ந்தது//

LOLunga mani

Anonymous said...

Wash the onions before you peel it!

said...

//ஆஹா.. நம்ம பேரும் இருக்கு.. கொஞ்சம் டைம் கொடுங்க மணி.. எழுதிடுறேன் //

கண்டிப்பா எழுதுங்க கார்த்தி. ஒரு பெரிய லிஸ்ட் போட்டு ட்ரெய்லர் குடுத்திருந்தீங்க. அதுல இதையும் சேர்த்துக்குங்க :)

said...

//Wash the onions before you peel it!

//

Thanks for the advise anony :)

said...

படிக்க சுவையான எட்டு

said...

ஓக்கே அண்ணாத்தே எட்டு போட்டுட்டேன்

http://madippakkam.blogspot.com/2007/06/blog-post_29.html

said...

//படிக்க சுவையான எட்டு //

மிக்க நன்றி அம்மணி

said...

//ஓக்கே அண்ணாத்தே எட்டு போட்டுட்டேன்

http://madippakkam.blogspot.com/2007/06/blog-post_29.html //

அழைப்பை ஏற்று எட்டு போட்டதற்கு நன்றி லக்கி.

said...

தாமத்திற்கு மன்னிக்கவும், மணிகண்டன்!

அழைப்புக்கு நன்றி!

/அதனால சமீபத்தில நான் முழித்த, ரசிச்ச, சிரிச்ச, அதிர்ந்த , வியந்த, அழுத , யோசித்த /
நான்கூட ... நீங்களும் ஒரு விளையாட்டை ஆரம்பிக்க போறீங்கனு நினைச்சேன்..!!

/"..கிஃப்ட்னா கலர் பேப்பர் எல்லாம் சுத்தி தான் தருவாங்க. அவன் என்ன கலர் பேப்பர் சுத்தியா பொறந்தான்" /

இது சூப்பர்...! Goody to her..!!

சிவாஜி பட விமர்சனத்தையும் ... இல்ல... இல்ல..... எட்டையும் வித்தியாசமா எழுதி இருக்கீங்க!

/அந்த அரை நாள் சம்பளத்தை சந்தோஷ் wire transfer பண்றேன்னு சொல்லிட்டாரு. /

அப்படிகிறீங்க... உற்சாகமான வார்த்தைக்கு நன்றி! விரைவில்........அனுப்புகிறேன்.... ;)